வுட்ஸ்டாக்  இசைத் திருவிழா - 1969

அமெரிக்காவின் நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பெத்தேல் என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நண்பகல் தொடஙகி மூன்று நாட்கள் 'பாப் இசை திருவிழா' ஒன்று நடைபெற்றது
வுட்ஸ்டாக்  இசைத் திருவிழா - 1969
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பெத்தேல் என்னும் இடத்தில்
1969-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நண்பகல் தொடஙகி மூன்று நாட்கள் வரை, அதாவது 18 ஆம் தேதி வரை 'பாப் இசை திருவிழா' ஒன்று நடைபெற்றது. 

வியட்நாம் போரில் அமெரிக்கா ஈடுபட்டதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக்
குரல்கள் எழுந்தன. அந்தக் குரல்களின் ஒருங்கிணைந்த வடிவமாக, அமெரிக்காவின் பிரபலமான இசைக் கலைஞர்கள்  நடத்திய   வுட்ஸ்டாக்  இசைத் திருவிழா  'இசையும் சமாதானமும் நிரம்பிய மூன்று நாட்கள்' என்ற பெயரில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கடந்த நூற்றாண்டில் உலகளாவிய அளவில், சமாதானத்தை
வலியுறுத்தும் பொருட்டு நடந்த மிகப் பெரிய இசைநிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள்  கலந்து கொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com